ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலய வரலாறு
ஸ்ரீ மீனாட்சி துணை!
சகல வளங்களும் நிறைந்து விளங்கும் ஜேர்மன் நாட்டின் தென்பால் அமைத்துள்ள பக்நாங் நகரில் தன்னை நாடி தேடிவரும் அடியார் களுக்கு இன்னருள் புரிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருள் புரியும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலய வரலாறு.
உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களை கருத்திற் கொண்டு எமதுகலை கலாச்சாரம் சமய சம்பிரதாயங்களை பேணிக் காக்கவும் சமையமாற்ரங்கள் தலை தூக்கி நின்ற காலகட்டம் அது. அதை தடுக்கும் நோக்கத்தோடும் இறைநம்பிக்கையும் ஆன்மீக அறிவையும் பெறுவதற்கும் எங்களுக்குள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தனி மனிதனாக திரு .நடராசா மகேந்திரன் (தற்போதைய அறங்தாவலர்) தன் நகரமாகிய பக்நாங் நகரத்து இந்து மக்களிடமும் சுற்றியுள்ள நகர இந்து மக்களிடமும் எடுத்த முயற்சியன் காரணமாக 1993 ஆம் ஆண்டு புரட்டாதி 3ம் திகதி AWF Ortsverein Backnang இல் சிறிலங்கா கலாச்சார மன்றம் என்ற பெயரில் பயணை செய்யப்பட்டு வந்தது பின் மக்களின் ஆதரவுடன் எல்லோர் விருப்பத்திற்கிணங்க 1994 ஆம் ஆண்டு பங்குனி 27ம் நாள் ( பங்குனி உத்திரம் அன்று ) திரு .ஜெகதீஸ்வர குருக்களால் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் என்ற பெயரில் பூசையும் பயனையும் நடைபெற்று வந்தது. ஆலய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. திரு நடராஜா மகேந்திரன் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
நிர்வாகத்தின் உதவியுடனும் மக்களின் ஆதரவுடனும் 1996-08 15 இல் Eberhard str-8 இல் ஜெகதீஸ்வர குருக்களால் மீனாட்சி அம்மன் விக்கிரகம் பிரதிட்டை செய்யப்பட்டு பிள்ளையார் முருகன் பைரவர் பூசைகளும் விசேடபூசைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
2008 ஆம் ஆண்டிலிருந்து திரு நடராஜ வேணுகோபால் குருக்கள் ஆலயத்தின் பிரதான குருக்களாக நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து ஆலய பூசைகளை திரு வேணுகோபால குருக்கள் தொடர்ந்து செய்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு திரு .நடராசா மகேந்திரன் நிர்வாகத்தையும் குருக்களையும் அழைத்து Sulzbacher Str -56 இல் கோவில் கட்டுவதற்கான இடம் வாடகைக்கு இருப்பதாக தெரிவித்தார். எல்லோரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள். மக்களிடமும் தெரிவிக்கப்பட்டு எல்லோர் விருப்பத்துடன் 2011ம் ஆண்டு கோவில் Sulzbacher str-56 க்கு மாற்றப்பட்டது. பின் எல்லோர் விருப்பத்தின்படி கோவில் திருப்பணி வேலைகள் ஆரம் பிக்கப்பட்டு ஆகம விதிப்படி கட்டி முடிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு ஆனி மாதம் 21ம் திகதி கும்பாபிசேகம் செய்யப்பட்டது. எல்லா தெய்வ விக்கிரகங்களும் நவக்கிரகங்களும் கருங் கல்லில் வடிவமைக்கப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டது. பூசைகளெல்லாம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2019 ஆம் ஆண்டு ஜம் பொன்னாலான சுந்தரேஸ்வரப் பெருமானுக்கும் மேருயந்திரத்திற்கும் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. எழந்தருளி அம்பாளுடன் சுந்தரேஸ்வரரும் கற்பக்கிரகத்தில் மூல விக்கிரகத்துடன் மகாமேரு யந்திரமும் பிரதிட்டை செய்யப்பட்டது.
ஆலய அமைப்பு:
ஆலயத்தின் கற்பக்கிருகத்தில் (மூலத்தானத்தில்) அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வலப்பக்கத்தில் பிள்ளையாரும் இடப்பக்கத்தில் வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானும் அருள்பாலிக் கின்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி தெய்வங்களாக இருந்து அருள் பாலிக்கின்றனர். பக்கத்தில் நவக்கிரக மூர்த்திகளும் தெற்கு முகமாக பைரவ மூர்த் தியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
கோவில் வளர்ச்சியில் அன்றிலிருந்து இன்றுவரை கூடவருபவர்கள்
திரு திருமதி மகேந்திரன்
திரு திருமதி யோகேஸ்வரன் (ரூபன்)
திரு திருமதி மகாதேவா
திரு திருமதி உலகநாதன்
திரு திருமதி யோகலிங்கம்
திரு திருமதி சத்தியசீலன்
திரு திருமதி நவரெட்ணம்
திரு திருவருள்மலை
திரு திருமதி துரைராஜா
திரு திருமதி திருநாவுக்கரசு திரு திருமதி நவநீதன்
திரு திருமதி இராகவன்
திரு திருமதி சுதாகரன்
திரு வேணுகோபால சிவாச்சாரியார் குடும்பம்
ஶ்ரீ மீனாட்சி அம்பிகை தாயின் ஆலயத்தை “ பரிபாலிக்கும் பாக்கியம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனும் போது நாமும் எம்பெருமாட்டியின் கருனைக்கு ஆளாகியுள்ளோம் என எண்ணி அகமகழ்கின்றோம்; அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் எம்முடன் சேர்ந்து ஒத்துளைப்பினை நல்கிவரும் ஆலய நிருவாகத்தினருக்கும், குருக்கள் ஐயா அவர்கட்கும், ஆலயவளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கும் மாதாந்த சந்தா தார்க்கும்
நிதி உதவி செய்பவர்களுக்கும் பல விஷேட தின பூசைகளையும், மற்றும் திருவிழாக்காலங்களையும் பொறுப்பேற்று முன்னின்று ஒத்துழைப்பு நல்கும் உபயதாரர்களுக்கும் அனைத்து அடியவர்களுக்கும் குறிப்பாக தொண்டாற்றிவருபவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதுடன் அன்னை ஶ்ரீ மீனாட்சி தாயின் அருள் கிடைக்க பிரார்திகின்றோம்.
சுபமங்களம்!
இங்ஙனம் ஆலய அறங்காவலர் திரு. ந.மகேந்திரன்!
Wie Backnangs Hindugemeinde feiert!
URL: https://share.google/zNaasPgE0UguMzgOf
URL: https://www.instagram.com/reel/DQEFYMpjJ_j/?igsh=MTBoODAweWVxbzQxbQ==