ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலய இணையத்தளம் உங்களை வரவேற்கிறது!
ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலய இணையத்தளம் உங்களை வரவேற்கிறது!
ஆலய வரலாறு
ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வரலாறு
சகல வளங்களும் நிறைந்து விளங்கும் ஜேர்மன் நாட்டின் தென்பால் அமைத்துள்ள பக்நாங் நகரில் தன்னை நாடி தேடிவரும் அடியார் களுக்கு இன்னருள் புரிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருள் புரியும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலய வரலாறு.
உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களை கருத்திற் கொண்டு எமதுகலை கலாச்சாரம் சமய சம்பிரதாயங்களை பேணிக் காக்கவும் சமயமாற்றங்கள் தலை தூக்கி நின்ற காலகட்டம் அது. அதை தடுக்கும் நோக்கத்தோடும் இறைநம்பிக்கையும் ஆன்மீக அறிவையும் பெறுவதற்கும் எங்களுக்குள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தனி மனிதனாக திரு.நடராசா மகேந்திரன் (தற்போதைய அறங்தாவலர்) தன் நகரமாகிய பக்நாங் நகரத்து இந்து மக்களிடமும் சுற்றியுள்ள நகர இந்து மக்களிடமும் எடுத்த முயற்சியின் காரணமாக 1993 ஆம்’ ஆண்டு புரட்டாதி 3ம் திகதி AWF Ortsverein Backnang இல் சிறிலங்கா கலாச்சார மன்றம் என்ற பெயரில் பயணை செய்யப்பட்டு வந்தது பின் மக்களின் ஆதரவுடன் எல்லோர் விருப்பத்திற்கிணங்க 1994 ஆம் ஆண்டு பங்குனி 27ம் நாள் ( பங்குனி உத்திரம் அன்று ) திரு ஜெகதீஸ்வர குருக்களால் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் என்ற பெயரில் பூசையும் பயனையும் நடைபெற்று வந்தது. ஆலய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. திரு நடராஜா மகேந்திரன் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
நிர்வாகத்தின் உதவியுடனும் மக்களின் ஆதரவுடனும் 1996-08 15 இல் Eberhard str-8 இல் ஜெகதீஸ்வர குருக்களால் மீனாட்சி அம்மன் விக்கிரகம் பிரதிட்டை செய்யப்பட்டு பிள்ளையார் முருகன் பைரவர் பூசைகளும் விசேடபூசைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
2019 ஆம் ஆண்டு ஜம் பொன்னாலான சுந்தரேஸ்வரப் பெருமானுக்கும் மேருயந்திரத்திற்கும் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. எழந்தருளி அம்பாளுடன் சுந்தரேஸ்வரரும் கற்பக்கிரகத்தில் மூல விக்கிரகத்துடன் மகாமேரு யந்திரமும் பிரதிட்டை செய்யப்பட்டது.
ஆலய அமைப்பு: ஆலயத்தின் கற்பக்கிருகத்தில் (மூலத்தானத்தில்) அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வலப்பக்கத்தில் பிள்ளையாரும் இடப்பக்கத்தில் வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானும் அருள்பாலிக் கின்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி தெய்வங்களாக இருந்து அருள் பாலிக்கின்றனர். பக்கத்தில் நவக்கிரக மூர்த்திகளும் தெற்கு முகமாக பைரவ மூர்த் தியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஶ்ரீ மீனாட்சி அம்பிகை தாயின் ஆலயத்தை “ பரிபாலிக்கும் பாக்கியம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனும் போது நாமும் எம்பெருமாட்டியின் கருனைக்கு ஆளாகியுள்ளோம் என எண்ணி அகமகழ்கின்றோம்; அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் எம்முடன் சேர்ந்து ஒத்துளைப்பினை நல்கிவரும் ஆலய நிருவாகத்தினருக்கும், குருக்கள் ஐயா அவர்கட்கும், ஆலயவளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கும் மாதாந்த சந்தா தார்க்கும், நிதி உதவி செய்பவர்களுக்கும் பல விஷேட தின பூசைகளையும், மற்றும் திருவிழாக்காலங்களையும் பொறுப்பேற்று முன்னின்று ஒத்துழைப்பு நல்கும் உபயதாரர்களுக்கும் அனைத்து அடியவர்களுக்கும் குறிப்பாக தொண்டாற்றிவருபவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதுடன் அன்னை ஶ்ரீ மீனாட்சி தாயின் அருள் கிடைக்க பிரார்திகின்றோம்.
இங்ஙனம் ஆலய அறங்காவலர் திரு. ந.மகேந்திரன்!
அறிவிப்புப் பலகை
ஆலயத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு!
பூஜை முன்பதிவு
உங்களின் நேர்த்திக்கடன் மற்றும் பூஜை முன்பதிவு செய்ய!
வருடாந்திர திட்டம்
இவ்வாலயத்தில் நடைபெறும் ஒரு வருடதிற்கான விஷேட தினங்கள் மற்றும் உபயகாரர்கள்!
ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் நடைபெறும் விஷேட தினங்கள்!



எமது சேவைகள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.
வலைப்பதிவுகள் மற்றும் கட்டுரைகள்
ஆன்மிக அறிவை மேம்படுத்த
புகைப்படத் தொகுப்புக்கள்
இவ்வாலயத்தின் புகைப்படங்கள்
Services
To Get you Pooja Or Fulfillment of a Vow
Special Pooja
- Panguni Uththaram - 03-03-2026
- iyppasi Thingal - 10-11-2026
- Markali Thingal - 05-12-2026
Annual Feast
- Kodiyetram - 10-09-2025
- Ther - 19-09-2025
- Theertham - 20-09-2025
Opening Time
- Morning -- 06.00 AM - 08.00 AM
- After Noon -- 12.00 PM - 01.30 PM
- Evening -- 05.30 PM - 07.00 PM
திருமண சேவைக்கான மணவறை, தலைப்பாகை, மாலைகள், பலகாரங்கள், சாப்பாடுகள், குருக்கல் மற்றும் பூஜைக்குரியபொருட்கள் ஒழுங்கு பண்ணித்தரப்படும். மேலதிகமான விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
திருமண சேவை