நம் நாட்டில் இடம்பெறும் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. புரட்டாதி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாள் வளர்பிறையில்; “பிரதமை தொடக்கம் நவமி வரை” ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படும் நோன்பு “சாரத நவராத்திரி” என்று அழைக்கப்படுகின்றது. இந்ந சாரதா நவராத்திரி ஆதிபராசக்தியை மையமாக வைத்து முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதிக்கும் பூஜைகள் நடைபெறுகின்றது. இந்த ஒன்பது நாட்களும் வீரம், செல்வம், ஞானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒன்பது நாட்களும் அன்னை ஒன்பது வடிவங்களில் ஒன்பது நாமங்களில் வழிபாடு செய்யப்படுகின்றார். இந்த விரதத்தை அனுஷ் டிப்பவர்கள் சாத்வீக உணவையே உண்ண வேண்டும். நவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அமாவாசை அன்று ஒருநேரம் உணவருந்தி பிரதமை தொடக்கம் எட்டு நாட்கள் விரதமிருந்து ஒன்பதாம் நாள் நவமியன்று உபவாசம் இருந்து அடுத்த நாள் தசமியன்று காலை உணவருந்த வேண்டும். ஒன்பது நாட்களும் அவரவர் உடல் நிலைக்கேற்ப உணவருந்தி விரதத்தை
அனுஷ்டிக்கலாம்.

புரட்டாதி மாத மகாசிவராத்திரியின் புராணக்கதை பின்வருமாறு:
மகிசாசுரன் என்ற அரக்கன் பிரமனை நோக்கி தவமிருந்து யார் கண்ணிலும் படாத ஒரு பெண்ணிணால்தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோக வாசிகளையும் பூலோக வாசிகளையும் மிகவும் துன்புறுத்தினான். அவன் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் மும் மூர்த்திகளிடம் சென்று முறையிட்டார்கள். மகிசாசுரனை அழிக்க சிவன், விஸ்னு, பிரம்மா ஆகிய மூவரின் சக்திகளும் ஒன்று சேர்ந்த போது ஒரு ஒளி தோன்றியது. அந்த ஒளியில் இருந்;து ஒரு “பெண் தெய்வம”; தோன்றினாள். அந்த பெண் தெய்வம் தான் “துர்க்கை அம்மன்” துர்க்கை அம்மன் மகிசாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாவது நாள் நவமி அன்று வதம் செய்தார். அடுத்தநாள் தசமி அன்று தேவர்கள் ஆயுத பூஜை செய்து வெற்றியைக் கொண்டாடியதால் “விஜயதசமி” என்று அழைக்கப்படுகின்றது. மகிசாசுரனுடன் போர் செய்து தேவலோகத்தையும் பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுர மர்த்தினி” என்ற பெயர் பெற்றார்.
அன்னை பார்வதி பண்டாசுரன் என்ற அரக்கனுடன் போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவனை வழிபட்டு “விஜயதசமி” அன்று வன்னி மரமாக நின்ற பண்டாசுரனை வதம் செய்தார். இதுவே “வாழை வெட்டு” விழாவாக விஜயதசமி அன்று கொண்டாடப்படுகின்றது. மாலை வேளையில் அசுரனைக் கொன்றதால் மாலையில் வாழை வெட்டு வைபவம் கொண்டாடப்படுகின்றது.

Scroll to Top