Uncategorized

தமிழ் இந்துக்கள் நவக்கிரகங்களை ஏன் வணங்குகிறார்கள்?

தமிழ் இந்துக்கள் நவக்கிரகங்களை ஏன் வணங்குகிறார்கள்? தமிழ் இந்துக்கள் நவக்கிரகங்களை – ஒன்பது வான கிரகங்களை – பிரார்த்தனை செய்து, அவர்களின் ஆசிகளைப் பெறவும், இந்த கிரகங்களின் எதிர்மறை தாக்கங்களைத் தணிக்கவும் செய்கிறார்கள். ஒவ்வொரு கிரகமும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை – ஆரோக்கியம், செல்வம் மற்றும் உறவுகள் போன்றவற்றை ஆளுவதாக நம்பப்படுகிறது. பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளைச் செய்வதன் மூலம், பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் சமநிலை, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். பிரபஞ்ச ஒழுங்கைக் குறிக்கவும், வழிபாட்டாளர்கள் துரதிர்ஷ்டங்களை விரட்டவும் நவக்கிரகங்கள் கோயில்களில் நிறுவப்பட்டுள்ளன.

Uncategorized

Wie Backnangs Hindugemeinde feiert: https://www.bkz.de/nachrichten/wie-backnangs-hindugemeinde-feiert-313500.html#google_vignette

https://www.bkz.de/nachrichten/wie-backnangs-hindugemeinde-feiert-313500.html#google_vignette Zwischen Girlanden, Öllampen und Schmuck feiern Tamilen im Backnanger Sri Meenakshi Ambal Tempel das Lichterfest Deepavali. Seit über 30 Jahren pflegt die Gemeinde ihre religiösen Traditionen – ein Stück gelebte Heimat für viele, deren Wurzeln in Sri Lanka liegen.

Uncategorized

தீபாவளி / Diwali Festival

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலகெங்கிலும் பரந்து வாழும் இந்துக்களால்க் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை பெரும்பாலும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளித் தினத்தன்று காலையில் வீட்டை சுத்தம் செய்து, கழுவி மெழுகி வீட்டைத் தூய்மைப் படுத்தி அலங்கரித்து, களிமண் சுட்டி விளக்குகள் ஏற்றி வீட்டு முற்றத்தில் கோலமிட்டு அழகு படுத்தவேண்டும் வீட்டிலுள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை தரித்து நிறைகுடம் ஏற்றி .தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி லக்சுமி பூசை செய்து வணங்கி வழிபாடு செய்வர். சிறுவர்கள் பட்டாசு (வெடி) கொளுத்தி மகிழ்வர். லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் வளரும் என்பது நம்பிக்கை. வீடுகளில் சுவையான அதாவது இனிப்பான பலகாரங்கள் சிற்றுண்டிகள் செய்து தமது அயலவர் உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்வர். பலர் தமது சொந்தம் பந்தங்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து உணவுண்டு கழித்துக் கூடி மகிழ்வர். தீபாவளியின்போது பெரியோர்களை வணங்கி அவர்களிடம் ஆசியும், வாழ்த்தும் பெற்றுக்கொள்வர்.புதிதாக மணமுடித்தவர்களுக்கு அமையும் முதலாவது தீபாவளி தலைத் தீபாவளி எனப்படும். மாப்பிள்ளையையும் பெண்ணையும் கோலமிட்ட தரையில் உட்கார வைத்து குங்குமமிட்டு ஆரத்தி எடுத்து நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்குவார்கள். அடுத்து அவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்று அவர்கள் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியை வாங்கி உடுத்திக் கொள்வது மரபாகும்.சில இடங்களில் தீபாவளியின் போது இளம் பெண்கள் சுட்டிகளில் தீபங்கள் ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அமிழ்ந்துவிடாமலும் அணையாமலும் மிதந்து செல்ல வேண்டும். அப்படி சென்றால் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை. தீபாவளி புராணக் கதை இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் அதுவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்பது ஒரு புராணக் கதை புராணக்கதை நரகாசுரன் என்ற அசுரன், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி யும் வந்தான். அப்போது கிருஷ்ணர் தனது திறமையால் அந்த நரகாசுரனை வதம் செய்தார் என்பது புராணம். இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரத்தில் சிவந்த மண்களம். என குறிப்பிடப் பட்டுள்ளது. பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், மீட்டார் எனவும். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப் படுகின்றது என்பதும் ஒரு புராணக் கதையாகும்.

Uncategorized

நவராத்திரி விரதம் உருவான வரலாறு

நம் நாட்டில் இடம்பெறும் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. புரட்டாதி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாள் வளர்பிறையில்; “பிரதமை தொடக்கம் நவமி வரை” ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படும் நோன்பு “சாரத நவராத்திரி” என்று அழைக்கப்படுகின்றது. இந்ந சாரதா நவராத்திரி ஆதிபராசக்தியை மையமாக வைத்து முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதிக்கும் பூஜைகள் நடைபெறுகின்றது. இந்த ஒன்பது நாட்களும் வீரம், செல்வம், ஞானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒன்பது நாட்களும் அன்னை ஒன்பது வடிவங்களில் ஒன்பது நாமங்களில் வழிபாடு செய்யப்படுகின்றார். இந்த விரதத்தை அனுஷ் டிப்பவர்கள் சாத்வீக உணவையே உண்ண வேண்டும். நவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அமாவாசை அன்று ஒருநேரம் உணவருந்தி பிரதமை தொடக்கம் எட்டு நாட்கள் விரதமிருந்து ஒன்பதாம் நாள் நவமியன்று உபவாசம் இருந்து அடுத்த நாள் தசமியன்று காலை உணவருந்த வேண்டும். ஒன்பது நாட்களும் அவரவர் உடல் நிலைக்கேற்ப உணவருந்தி விரதத்தைஅனுஷ்டிக்கலாம். புரட்டாதி மாத மகாசிவராத்திரியின் புராணக்கதை பின்வருமாறு:மகிசாசுரன் என்ற அரக்கன் பிரமனை நோக்கி தவமிருந்து யார் கண்ணிலும் படாத ஒரு பெண்ணிணால்தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோக வாசிகளையும் பூலோக வாசிகளையும் மிகவும் துன்புறுத்தினான். அவன் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் மும் மூர்த்திகளிடம் சென்று முறையிட்டார்கள். மகிசாசுரனை அழிக்க சிவன், விஸ்னு, பிரம்மா ஆகிய மூவரின் சக்திகளும் ஒன்று சேர்ந்த போது ஒரு ஒளி தோன்றியது. அந்த ஒளியில் இருந்;து ஒரு “பெண் தெய்வம”; தோன்றினாள். அந்த பெண் தெய்வம் தான் “துர்க்கை அம்மன்” துர்க்கை அம்மன் மகிசாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாவது நாள் நவமி அன்று வதம் செய்தார். அடுத்தநாள் தசமி அன்று தேவர்கள் ஆயுத பூஜை செய்து வெற்றியைக் கொண்டாடியதால் “விஜயதசமி” என்று அழைக்கப்படுகின்றது. மகிசாசுரனுடன் போர் செய்து தேவலோகத்தையும் பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுர மர்த்தினி” என்ற பெயர் பெற்றார்.அன்னை பார்வதி பண்டாசுரன் என்ற அரக்கனுடன் போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவனை வழிபட்டு “விஜயதசமி” அன்று வன்னி மரமாக நின்ற பண்டாசுரனை வதம் செய்தார். இதுவே “வாழை வெட்டு” விழாவாக விஜயதசமி அன்று கொண்டாடப்படுகின்றது. மாலை வேளையில் அசுரனைக் கொன்றதால் மாலையில் வாழை வெட்டு வைபவம் கொண்டாடப்படுகின்றது.

Uncategorized

கேதாரகௌரி விரதம்

இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்ளைக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும். சிவனுக்குரிய சிறந்த விரதங்களில் இவ்விரதமும் ஒன்றாகும். இவ்விரதம் அம்மன் மற்றும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்களுக்கு 21 நாட்கள் அமைந்த பிள்ளையார்கதை விரதம் போல பெண்களுக்கு 21 நாட்கள் அமைந்த கௌரி விரதமாகும் மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிப்பர். ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிப்பதுண்டு. எந்த விரதமாக இருந்தாலும் விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்ததே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மாட்டுச் சாணம் அல்லது சந்தனம் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் குற்றி பூசை அறையில் வைத்து விநாயகராக வழிபடல் வேண்டும். விரத நாட்களில் தினமும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைப் பொங்கல், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை படைத்து கௌரி நோன்பு பாடல் படித்து வழிபடல் வேண்டும். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இருபத்தோராவது திதியான இறுதி நாளன்று அந்நூலை கோயில்களில் குருக்களைக் கொண்டும் அல்லது வீடுகளில் தாமாகவேனும் ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர். விரத வரலாறு மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என் அழைப்பர். அப்படியான இமயமலை கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைந்து சுயம்பு லிங்கத்தினை வழிபட்டு கேதார கௌரி நோன்பிருந்து அதன் பலனாக சிவனுடன் பாதியாக அதாவது அம்மை, ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக இணைந்து கொண்டார் என்பது புராணம். சிவனை நோக்கி இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும் தேவி வழிபட்டபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. விரிவான வரலாறு முன்னொரு காலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்து. பிருங்கிகிருடி முனிவரின் நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக இமயமலை கேதாரப்பகுதியில் கௌதம முனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் தோன்றினான். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று “அங்கனமே ஆகுக” என்று அருள் புரிந்தார் என்பது புராணம். கேதார கௌரி விரத பாடல் தேவி துணை ஓம் சக்தி காப்பு முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய் சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும் எக்குற்றமும் வாராமற்கா. வேண்டுதற் கூறு காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய் பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய் சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மா காளிதாயே கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய் அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய் சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய் ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய் விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும் அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிவிடு காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே! ஏட்டுடைத் தேவியரே எல்லாம்மிகு வல்லபையே காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள் நானுமக்குத் தாறேனம்மா நயந்து எம்மைக் காருமம்மா காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே வித்தை விதைப்பவளே வினையாவும் காப்பவளே எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையை கணப்பொழுதே மாற்றிவிட்டால் ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகழ் தேவியளே காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும் ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும் தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும் இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும் நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும் சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே குங்குமப் பூச்சுவளே குலக்கொழுந்தே கௌரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில் பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன் காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன் தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி சொல்லற்கு அரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவோடு தவமிருந்து பக்தி மனதுடனே பரவி அணிவோர்க்கு சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள் முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு எச்சகத்தில் உள்ளோர் எல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள் கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பருளும். திருச்சிற்றம்பலம்

Uncategorized

கந்தசஷ்டி விரதம்

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டிவிரதம். இந்த விரதத்தின் சிறப்பை வைத்தே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் வீட்டில்ச் செல்வம் கொழிக்கும் என்பது பொருளாகும். கந்தசஷ்டி விரதம், ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சஷ்டி என்றால் ஆறு என்று பொருளாகும். கந்தசஷ்டி விரதமானது முருகக் கடவுள் ஆறு நாட்கள் சூரனுடன் போர் புரிந்து ஆறாவதுநாள் சஷ்டி அன்று சூரனை அழித்த தினமான சூரன்போருடன் முடிவடைகிறது. முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந்தவமாகக் கருதி, அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்டு மிகுதி .ஆறு தினங்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது. இவ்விரத முறையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, அல்லது ஐந்து நாட்களும் இரவுவேளையில் மட்டும் உணவருந்தி ஆறாம் நாள் உபவாசம் இருந்து ஏழாம் நாள் காலையில் உணவு அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர் விரத தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்து விரதத்தினை ஆரம்பிப்பது வழக்கம். பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் கோவிலில் காப்பை அவிழ்த்து பூசை செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி பாரணைப் பூஜை முடிந்தது விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் உன்னதமான விரதம் இந்த கந்த சஷ்டி விரதமாகும். முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நடைபெறும். கந்த சஷ்டி விரத வரலாறு சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். சிவபெருமானது நெற்றியிலிருந்து தெறித்த பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாகத் தோன்றின அக்குழந்தைகளை உமாதேவியார் அணைத்து எடுக்க ஆறுதிருமுகமும், பன்னிரண்டு திருக்கையமுடைய ஓருருவாய் முருகப் பெருமான் எழுந்தருளினார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாக முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது. சூர சம்காரத்தின் முடிவில் முருகன், மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார் என கந்தபுராணம் கூறுகிறது. கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகும். ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும். இவ்விரதத்தின் போது, தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்தபுராணம் ஆகியவற்றைப் படிப்பது என்பது வழிபாட்டின் ஒரு பகுதியாகும். ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை பெண்கள் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து. அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரதநாட்கள் ஆறு. ஆறெழுத்து மந்திரம்  (ச ர வ ண ப வ) ச  – லட்சுமி கடாட்ச்சம்ர – சரஸ்வதி கடாட்ச்சம்வ – போகம் – மோக்ஷம்ண – சத்துரு ஜெயம்ப – ருத்யு ஜெயம்வ – நோயற்ற வாழ்வு ஆறுபடை வீடுகள் ஆறுபடை வீடுகளும் ஆறு ஆதாரங்களாக விளங்குகின்றன. திருப்பரங்குன்றம் – மூலாதாரம் திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம் பழனி – மணிபூரகம் சுவாமிமலை – அனாஹதம் திருத்தணிகை – விசுத்தி பழமுதிர்சோலை – ஆக்ஞை. சரவணப் பொய்கை முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான  திரு ஆவினன் குடியில் (பழனி) சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சரவணப் பொய்கையாகும். கந்தர் சஷ்டி கவசம் பாலன் தேவராஜன் என்ற முருக பக்தனால் ஆறுபடை வீடுகளையும் நோக்கி எழுதப்பட்ட முருக புராணங்களில் திருச்செந்தூர் முருகனைநோக்கிப் பாடப்பட்ட கந்த சஷ்ட்டி கவசமே பிரபல்யமாகி எல்லோராலும் பாராயணம் பண்ணப்படுகிறது. திருச்செந்தூர் முருகனை நோக்கி பாலன் தேவ ராயன் என்பவரால் பாடப்பெற்ற கந்தர் சஷ்டி கவசத்தினை தினமும் காலையிலும் மாலையிலும் சிந்தை தவறாது முருகன் மீது பக்தி வைத்து பாராயணம் பண்ணவேண்டும். அதிலும் தினமும் முப்பத்தாறு தடவைகள் ஒரே சிந்தனையோடு தொடர்ந்து பாராயணம் பண்ணி விபூதி பூசி வழிபட்டால் எட்டுத் திக்கும் உன்வசமாகும். எட்டுத் திக்கிலும் உள்ள தெய்வங்கள் உனக்கு அருள்புரியும். எதிரிகள் கூட உன்னைத் தேடி வந்து வணங்குவர் என்று கூறுகிறார் உதாரணமாக கந்தர் சஷ்டி கவசத்தில், “ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய” என்று ஒரு வரி வருகிறது. அதாவது கந்தர் சஷ்டி கவசத்தினை ஒரு நாளைக்கு முப்பத்தாறு தடவை தொடர்ந்து மனமுருகித் துதித்தால் எட்டுத் திக்கும் உனது வசமாகும் என்று அர்த்தமாகும். “கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்காலையில் மாலையில் கருத்துடன் நாளும்ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக்கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டுஓதியே செபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்”. கந்தர் சஷ்டி கவசம் (கந்தர் கவசம்) மூலமும் விளக்கமும் கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும். இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்தார் என்பதும் மட்டுமே அறியப்பட்டுள்ளது. அவரது பூர்வீகம் அறிய முடியவில்லை. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கந்தர் கவசங்களை இயற்றியுள்ளார். அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப் படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய “சஷ்டியை நோக்க சரவண பவனார்” என்று ஆரம்பிக்கும் கவசமே பெறும்பாலானோர்களால் தினமும் படிக்கப்படுகிறது. சஷ்டி கவசம் பிறந்த கதை: முருக பக்தனான பாலதேவராய சுவாமிகள் ஒருசமயம் கடும் வயிற்றுவலியால் துன்புற்றார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து பாலதேவராய சுவாமிகள் சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம். என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். விரத முதல் நாள் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகனை வழிபட்டு விரதத்தினை முடித்து கோயில் மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அந்தக் கணமே பாலதேவராய சுவாமிகள் மனதில் முருகனை நோக்கிப் பாடத் தோன்றியது. “சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” என்று ஆரம்பிக்கும் திருச்செந்தூர் திருத் தலத்திற்கான 238 வரிகளைக் கொண்ட சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனிமலை, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை ஆகிய திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். ஆறு சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்த போது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி பூரண குணமாகி இருந்தது. கந்தசஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை உணர்ந்து கொண்ட சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கந்த சஷ்டி கவசத்தில் வரும் “சிரகிரி வேலவன்” எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை. சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க மந்திரவரிகள் கொண்டது சஷ்டி கவசம். தினமும் இந்த கவசத்தை ஓதி முருகனை நினைந்து வணங்கி வர தீவினை அகலும். அதிலும் சஷ்டி திதியில் ஓதி வழிபட இன்னும் பலமடங்கு பயன் உண்டு. அதனால் இதற்கு சஷ்டி திதியில் சொல்லும் கவசம் என்ற பொருளில் சஷ்டி கவசம் என்ற பெயர் வந்தது முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Uncategorized

நவராத்திரி விரதம்

இந்துக்களால் சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. “கல்வி, செல்வம், வீரம்” ஆகிய அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி, தசமி வரையிலான 9 நாட்களும், அம்பாளை தரிசிப்பதற்கு உகந்த நவராத்திரி நாட்களாகும். இருந்தும் வருடத்தில் நான்கு நவராத்திரிகள் அம்மன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றன. அவையாவன மாசி மாதத்தில் வரும் “சியாமளா நவராத்திரி”, பங்குனி மாதத்தில் வரும் “வசந்த நவராத்திரி”, ஆடி மாதத்தில் வரும் “ஆஷாட நவராத்திரி”, புரட்டாசி மாதத்தில் வரும் “சாரதா நவராத்திரி” ஆகியவையாகும். புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும். ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும். நவராத்திரி என்பது அம்பிகையின் வழிபாட்டுக்குரிய ஒன்பது இரவுகளாகும். சிவனுக்கு சிவராத்திரி ஒரு இரவு போல அம்பிகைக்கு நவராத்திரி அதாவது ஒன்பது இரவுகள் விதம் அனுட்டிக்கப்படுகிறது. அம்பாள் அவதாரமென்பது இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என துர்க்கை இலட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்த அவதாரமே அம்பிகை அவதாரமாகும். நவராத்திரி பூசையானது வீரம், செல்வம், ஞானம் (கல்வி) மூன்று சக்திகளையும் அடக்கி நிற்கும் பூசையாகும். செயல் என்ற கிரியா சக்தியும், இச்சா என்ற அன்புமயமான பக்தியும், ஞானமாகிய கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்கும் என்பதை விளக்குவதே இந்த விரதத்தின் அடிப்படைக் கருத்தாகும். நவராத்திரி ஒன்பது நாட்களையும் மூன்று மூன்று நாட்களாகப் பிரித்து வீரம், செல்வம், கல்விக்குரிய தெய்வங்களான துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய சக்திகளை வணங்கி அனுடிக்கப்படுகிறது. எந்த விரதமாக இருந்தாலும் விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்தே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மாட்டுச் சாணம் அல்லது சந்தனம் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் குற்றி பூசை அறையில் வைத்து விநாயகராக வழிபடல் வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான வீரக்கடவுள் துர்க்கையின் வழிபாடாகும் இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்கின்றான். இம் மூன்று நாளும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும் நாட்களாகும். நடுவில் உள்ள மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான செல்வக் கடவுளாகிய இலக்குமியின் வழிபாடாகும். இலட்சுமி, அட்டலட்சுமியாக சகல அட்ட ஐஸ்வரியங்களையும் அளிக்கிறாள் இம் மூன்று நாளும் இலக்குமி தேவியை வழிபாடு செய்யும் நாட்களாகும். இறுதி மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான ஞானக் கடவுள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும் நாட்களாகும். இவளே கலைமகள், கலைவாணி எனவும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதி ஞான (கல்வி) அருள் வழங்குகின்றாள் ஆயுத பூசை கடைசி ஒன்பதாம் நாள் நவமி ஆகும். இது “மகாநவமி” என அழைக்கப்படுகிறது. அன்று வீடுகளில் ஆயுத பூசை நாளாக மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தாம் தாம் செய்யும் தொழில்களுக்குரிய ஆயுதங்களை, மாணவர்கள் தமது பாடப் புத்தகங்களை தேவி முன் பூசையில் வைத்து, அவல், பொரி, கடலை, சுண்டல் செய்து படைத்து சகலகலாவல்லி மாலை படித்து வணங்கி அம்பாளின் ஆசியைப் பெறுவதாகும். விஜயதசமி சரஸ்வதி பூசையின் இறுதி நாளான பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். பொதுவாக விஜயதசமி கோயில்களிலேயே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்வு நடைபெறும். ஏடு தொடங்குதல் என்பது பாடசாலைக்குச் செல்லத் தயாராகும் பிள்ளைகளுக்கு முதன் முதலாக ஆசிரியர்கள், கல்வி மான்களால் அவர்களது விரல்களால் மண்ணில் தமிழ் எழுத்துக்கள் எழுதிக் காட்டி கல்வியை ஆரம்பித்து வைக்கும் நாளாகும். ஓன்பது நாளும் விரதம் நோற்றவர்கள்,விரதத்தினை முடிக்கும் தினம் விஜயதசமி ஆகும். நவராத்திரி விஜயதசமியில் முடிவடைகிறது. விஜயதசமியை “தசரா” எனவும் அழைப்பர். மானம்பூ திருவிழா நவராத்திரியின் இறுதிநாளன்று மானம்பூ திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கபட்ட குதிரை வாகனத்தில் அம்பாள் மானம்பூ வேட்டைக்கு புறப்பட்டுச் சென்று வாழை வெட்டு நடைபெறும். மாமரத்தில் செய்யப்பட அம்பு (மா+ அம்பு) = மானம்பூ எனப்படும். வன்னி மரத்தில் ஒழிந்த மகிஷாசுரனை அம்பிகையானவள் மானம்பூவினால்க் குத்திக் கொன்றதாக புராணம் கூறுகிறது கன்னி வாழை வெட்டல் (மானம்பூ) ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய கன்னி வாழை அதாவது குலை போடாத வாழை வெட்டுவது வழமை. புராணக் கதை மகிஷாசுரனுடன் அம்பிகை போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவனை வழிபட்டு அவனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரன் வன்னி மரத்தில் ஒழிந்தான் எனவும். தேவி நவமியில் வன்னி மரத்தை வெட்டி அசுரனைச் அழித்ததாகவும், மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுதபூசை செய்து கொண்டாடிய படியால், விஜயதசமி என வழங்கலாயிற்று என்றும் ஒரு புராணக் கதை உண்டு. இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி அழைக்கப்படுகிறது. அசுரனை அழித்த நேரம் மாலை வேளை, இதனை ஞாபகப்படுத்தும் முகமாக மாலை வேளையில் மம்மல் பொழுதில் வாழை வெட்டுவது வழக்கம். புராணக் கதை பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்களுடைய ஆயுதங்கள் எல்லாவற்றையும், ஒர் வன்னிமரத்தின் கீழ் புதைத்து வைத்துவிட்டு சென்றதாகவும். பின் வனவாசம் முடிந்து வந்து, அந்த ஆயுதங்களை அர்ச்சுணன் (விஜயன்) எடுத்து யுத்தம் புரிந்த நாள்தான் விஜயதசமி எனவும் ஒரு புராணக் கதை உண்டு.நவராத்திரி விரதத்தின்போது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து, நவதானியம் வளர்த்து நவமி வரை தினமும் மாலை வேளையில் பூசை செய்து வழிபடல் வேண்டும். நவராத்திரி கொலு நவராத்திரி பூசையின்போது வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்து வணங்கப்படுகிறது. களிமண்ணினால் கிருஷ்ணராகவும், ராமராகவும், முருகனாகவும், சிவனாகவும், அம்பாளாகவும் பல நவாத்திரி பொம்மைகள் செய்து பூசை அறையில் வைத்து அலங்கரிக்கப் படுகிறது. ஒரே களிமண்ணினால் வேறு வேறு உருவங்கள் உருவாக்குவது போல, சிவன் என்ற ஒரே சக்தி மானிட ஈடேற்றத்துக்காக பல வடிவங்கள் எடுக்கும் அதாவது முருகனாக, அம்பாளாக, விநாயகராக தோற்றமெடுத்து உலகைக் காக்கும் என்று பொருளாகும். இதனையே நவராத்திரிக் கொலு உணர்த்துகிறது. நவராத்திரியில் தேவியைத் (திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்று புராணங்கள் கூறுகின்றன. துர்க்கை அவதாரம், தேவர்களுக்கும், பூவுலகமக்களுக்கும் துன்பங்களைக் கொடுத்துவந்த அசுரர்களின் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியாத நிலையில், எல்லோரும் இறைவனிடம் சென்று, அசுரர்களின் துன்புறுத்தல்களிலிருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டிநின்றார்கள். இதன் காரணமாக, அசுரர்களின் தலைவனும், பல கொடுமைகளைக் கொடுப்பவனுமாகிய மகிடாசூரனை அழிப்பதற்கு, துர்க்கை அம்மனாக அவதாரமெடுத்து மகிஷாசூரனைச் சங்காரம் செய்த சத்தியே துர்க்கை அம்பாள் அவதாரமாகும். இலக்குமி இவர் செல்வத்தை வழங்கும் பெண் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் வணங்கப்படுகிறாள். சரசுவதி படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் வணங்குகிறார்கள். இருக்கு வேதத்தில் சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீரானது, இந்துக்களின் பார்வையில், படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இதனால்தான் சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன. சகலகலாவல்லி மாலை குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டி தமிழில் பாடிய பாமாலை ஆகும். அழகிய தமிழ் மொழியில் பாடப்பட்ட சகலகலாவல்லி மாலை “வெண்டாமரை” எனும் பாடலில் தொடங்கி “மண்கண்ட வெண்குடை”. எனும் இறுதிப் பாடலில் முடிகிறது. இதில் பத்துப் பாடல்கள் அடங்குகின்றன. நவராத்திரி காலங்களில் ஒன்பது நாளும் சகலகலாவல்லி மாலை சைவ மக்களால் பாடப்பட்டு வருகின்றது. பாடல் வரிகள் வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2 அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டுகளிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3 தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்றுகாக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4 பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5 பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடிகண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6 பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7 சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்லநல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8 சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்னநிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கைநற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடைகற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9 மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

Scroll to Top